தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை தேர்வு தொடங்கிய நிலையில் இத்தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 7 லட்சத்து 93 ஆயிரத்து 947 பேர் எழுதுகின்றனர்.
இந்நிலையில், 4 லட்சத்து 84 அயிரத்து 74 பெண்களும், 3 லட்சத்து 9 ஆயிரத்து 841 ஆண்களும், 51 மூன்றாம் பாலினத்தவர்களும் தேர்வெழுத தகுதி பெற்றுள்ளனர்.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்காக 2 ஆயிரத்து 763 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வினை கண்காணிக்க அதே எண்ணிக்கையிலான முதன்மை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சென்னையில் மட்டும் 75 ஆயிரத்து 185 பேர் தேர்வு எழுதும் நிலையில் தேர்வினை கருத்தில் கொண்டு இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.