நாளை முதல் அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து ரூ.2,000 நோட்டுகளை பெறக் கூடாது என்று கண்டக்டர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்தபடி ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, நாளை முதல் அரசுப் பேருந்துகளில் ரூ.2000 நோட்டுகளை பயணிக்களிடம் இருந்து பெற வேண்டாம் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
பயணிகளிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வந்தால் சம்பந்தப்பட்ட கண்டக்டர்களே பொறுப்பாவார்கள் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Follow the Daily Tamilnadu channel on WhatsApp:
https://t.ly/J_2ez