தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 15ம் தேதி முதல் அரையாண்டுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வானது காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் நடைபெற்று வருகிறது. காலையில் 6,8,10,12ம் வகுப்புகளுக்கும் மாலையில் 7, 9, 11ம் வகுப்புகளுக்கும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் சில மாவட்டங்களில் வினாத்தாள் தேர்வுக்கு முன்பாகவே வெளியாகி பெரும் சர்சையை ஏற்படுத்தியது. அதனால் இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் பள்ளிகளில் தேர்வை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு கருதி வினாத்தாள்களை ஆசிரியர்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வானது வரும் 23ம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வுக்கு பிறகு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் டிச.24ம் தேதி முதல் 2023 ஜன. 01ம் தேதி வரை 9 நாட்களுக்கு அரையாண்டுத்தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் 2023 ஜன.02ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.