தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 800 ரூபாய் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நூறு ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 470 ஆகவும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 48 ஆயிரத்து 80 ரூபாய் ஆகவும் விற்பனையாகி வருகிறது.
இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கடந்த ஒரு மாதத்தில் 1500 வரை சராசரியாக வீழ்ச்சி அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கடந்த ஏழு நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 3 ஆயிரத்து 384 ரூபாய் வரை உயர்ந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியதால் தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரை குறைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.