பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லை. பாஜகவின் உண்மை தொண்டர்கள் குறித்து யாரும் கவலைகொள்வதில்லை. அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்குப் பாதுகாப்பும் இல்லை. கனத்த இதயத்துடன் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.