சென்னையில் இலக்கியத் திருவிழா அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பண்பாட்டு அரங்கம், படைப்பரங்கம், சிறுவர்களுக்கான இலக்கிய அரங்கம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பயிலும் அரங்கம் என 4 அரங்கங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருவிழா இன்று முதல் வருகிற 8ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இத்திருவிழாவானது பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படுகிறது.
இதில் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமை திறன்யுடைவர்கள் உரையாட உள்ளனர். மேலும் மாலை நேரத்தில் கலைநிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த இலக்கியத் திருவிழாவை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இவர் மேலும் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது பள்ளி முதல் கல்லூரி வரை மாணவர்கள் தமிழில் படிக்கலாம் என உரையாற்றியுள்ளார்.
Leave a Comment