சென்னையின் நான்காவது மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 2) செம்மொழிப் பூங்காவில் தொடங்கி வைக்கிறார். யானை, மயில், ரயில், ஆமை உள்ளிட்ட 20 விதமான வடிவங்களில் மலர்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
ஜனவரி 18ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.150, குழந்தைகளுக்கு ரூ.75 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பார்வை நேரம் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.