சென்னை-அந்தமான் இடையேயான விமான சேவை கடந்த 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டதால் விமான பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி 14 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பொங்கல் பண்டிகையை கொண்டாட அந்தமானில் இருந்து தமிழ்நாடு வருவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விமான சேவை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகளும், இந்திய விமான நிலைய ஆணையமும் தகவல் தெரிவிக்காமல் அலட்சியம் காட்டுவதாக விமான பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment