மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் இன்று முதல் வேட்புமனு தாக்கல்..!

 

நாடு முழுவதும் 534 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் அன்றைய தினமே நடைபெறுகிறது.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச்-20) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் நிறைவு மார்ச் 27ஆம் தேதியும், வேட்புமனு பரிசீலனை மார்ச் 28ஆம் தேதியும் நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
Exit mobile version