தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. மயில்சாமி பல தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
விவேக், வடிவேலு உள்ளிட்ட மற்ற நகைச்சுவை நடிகர்களுடன் அவர் நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1