தமிழ்நாடு

தமிழக அரசு பேருந்துகளில் டெபிட் மற்றும் யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதி!!

தமிழக அரசு பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சென்னை மாநகர பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் பெற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இதற்கான சோதனை ஓட்டமும் பல பேருந்துகளில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் பிஎஸ்-VI பேருந்து சேவையை அமைச்சர் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

20240229 103228

டெபிட் மற்றும் யுபிஐ மூலம் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு வசதியாக, கண்டக்டர்களுக்கு மின்னணு டிக்கெட் வழங்கும் இயந்திரங்களையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார். சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixty two − = fifty five

Back to top button
error: