சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் அவரது பதவிக்காலத்தை வருகின்ற 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பதவிக்கால நீட்டிப்புக்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.