தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் தேர்வுகள் முடிவடைந்து காலாண்டு விடுமுறை தொடங்கவுள்ளது.
இந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை அதாவது 5 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. மேலும், பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறையாக வருகிறது.
இதையடுத்து காலாண்டு விடுமுறையை 9 நாட்கள் அதிகரிக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, காலாண்டு விடுமுறை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.