
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. மேலும் வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று கடைசி நாள் ஆகும். இதைத்தொடர்ந்து வேட்பாளர்களுக்கு இன்று சின்னங்கள் ஒதுக்கப்படும்.
முன்னதாக தேர்தலில் போட்டியிட 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும் 3 பேரின் வேட்புமனுக்களில் உரிய ஆவணங்கள் இல்லை என்று நிராகரிக்கப்பட்டது.