பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, தகுதியான மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 22ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 12ஆம் தேதி முடிவடைந்தது. இதில் மொத்தம் 2 லட்சத்து 53,954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர், அதில் 1 லட்சத்து 99,868 விண்ணப்பங்கள் தகுதியானதாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், 2024-2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டார்.
பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 65 மாணவர்கள் 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று வீரராகவ ராவ் தெரிவித்தார்.