தமிழகத்தில் வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவுபெறுகிறது.
கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில், தமிழகம் முழுவதும் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்த நிலையில், அக்னி நட்சத்திரம் நாளையுடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மெற்கு பருவமழை வரும் ஜூன் 4ம் தேதி தொடங்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
