விளம்பரம்
14 மாதங்களுக்கு பிறகு சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையேயான ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.
விளம்பரம்
இந்நிலையில், சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வேளச்சேரி செல்லும் ரயில்கள் வழக்கம்போல் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், மறு அறிவிப்பு வரும் வரை பார்க் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், பயணிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
விளம்பரம்