சென்னை தாம்பரத்தில் ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை பல்லாவரம்-கூடுவாஞ்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில்கள் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.