கச்சா எண்ணெய் விலை 60 டாலராக குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மாமனிதன் வைகோ ஆவணப்படம் வெளியீட்டு விழா இராமநாதபுரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் நடைபெற்றது. இதில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ மற்றும் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியைத் தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
- Advertisement -
அப்போது பேசிய அவர், மத்திய அரசின் செயல்பாடு ஏமாற்றமாக இருப்பதாகவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்றும் கூறினார். கச்சா எண்ணெய் விலை பீப்பாய் தற்போது 60 டாலராக இருப்பதாகவும் ஆனால் பெட்ரோல் டீசல் விலை 140 டாலராக இருந்தபோது என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலைக்கு தான் தற்போது விற்பனையாவதாகவும் தெரிவித்தார்.