திமுக தேர்தல் அறிக்கை: சிலிண்டர் ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 ஆக குறைக்கப்படும் என வாக்குறுதி!

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளதால், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசு 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக LPG சிலிண்டர் ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 ஆக குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளனர். இந்த வாக்குறுதி இல்லத்தரசிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 
 
Exit mobile version