கோவை, மேட்டுப்பாளையம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 21 செங்கல் சூளைகளின் மின் இணைப்பை துண்டித்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மருதூர், காளம்பாளையம், கெம்மாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த செங்கல் சூளைகள் அனுமதியின்றி இயங்கி வருவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் கிடைத்தது.
- Advertisement -
செங்கல்சூளையின் மின்இணைப்பை துண்டிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது. இதனையடுத்து 21 சூளைகளுக்கும் மின்வாரியத்தில் நோட்டீஸ் அனுப்பபட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.