images 85

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி மேற்படிப்பை தொடர்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-2023ம்‌ கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ 10ம்‌ வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளுக்கும் (போஸ்ட்‌ மெட்ரிக்‌) கல்வி உதவித்தொகை திட்டம்‌ மற்றும்‌ 9 மற்றும்‌ 10ம்‌ வகுப்பு (பிரிமெட்ரிக்‌) படிப்புகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த கல்வி உதவித்தொகை பெற http://escholarship.tn.gov.in/ என்ற இணையதளம்‌ தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் தகுதிவாய்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்க தேவையான வழிமுறைகள் குறித்த அறிவிப்பை தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், மாவட்டத்தில் இருக்கும் தகுதி வாய்ந்த பழங்குடியினர்‌ மாணவர்களிடமிருந்து புதிய மற்றும்‌ புதுப்பித்தல்‌ கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் http://escholarship.tn.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி பள்ளிகள்‌/கல்லூரிகள்‌ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் மாணவர்கள் தங்களின் வருமான சான்று, சாதிச்சான்று, வங்கி கணக்கு புத்தக நகல்‌, மதிப்பெண்‌ சான்று, வருகை சான்று, ஆதார்‌ எண்‌, தேர்ச்சி பெற்ற நகல்‌ ஆகிய அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.