ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று (1 ஆம் தேதி) முதல் வரும் 5 ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வருகிற 4 ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (1 ஆம் தேதி) முதல் வருகிற 5 ஆம் தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.