தமிழக அரசின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து அமல் படுத்தப்பட்டு வருகிறது. இது போக அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காகவும், அவற்றின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் பள்ளிக்கல்வித்துறைக்கு கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மாணவர்களின் தற்போதைய கற்றல் நிலை மற்றும் அவர்களின் மனப்போக்கு குறித்து விவாதிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அரசு கூட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது.
வருகிற ஜனவரி 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாணவர்கள் நலன் சார்ந்த பல்வேறு கருத்துகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.