வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த தினங்களாக மழை பெய்து வருவதால் வெப்பம் சற்று தணிந்துள்ளது.
சென்னையில் பெய்த மிதமான மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து ஜில்லென்ற சீதோஷ்ணம் நிலவுகிறது. தொடர்ந்து பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதாலும், இரவில் குளுமையான காற்று வீசுவதாலும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் வருகிற மார்ச் 23ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை மையம் ஆய்வு தெரிவித்துள்ளது.