தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 12ஆம் தேதி நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
- Advertisement -
எனவே, 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.