20230307 120807

புலம்பெயர் தொழிலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நாகர்கோவிலில் கையுறை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

நாகர்கோவில் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து உரையாடினார். மேலும் அவர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

வதந்திகளால் புலம்பெயர் தொழிலாளர்களிடம் அச்சம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், முதல்வர் நேரடியாக சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.