தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு அமெரிக்கா செல்கிறார்.
நாளை இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அவர், 28ம் தேதி சான்பிரான்சிஸ்கோ சென்றடைகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதன்பிறகு, வரும் 29-ம் தேதி சான்பிரான்சிஸ்கோ-வில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தமிழகம் வந்து தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இதில் அமெரிக்காவின் முன்னணி 500 நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.