தமிழகத்தில் 2022- 2023ம் கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் தான் மாணவர்கள் முழு பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதனால் அரையாண்டு தேர்வுக்கு முன்னதாக அனைத்து படத்திட்டங்களும் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு, மாணவர்கள் தேர்வுக்கு தயார் படுத்தப்படுகின்றனர்.
அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி தேர்வுகள் தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதி வரை நடக்கிறது. மேலும், பிப்ரவரி மாதம் செய்முறைத்தேர்வுகள் பாட வாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை தமிழக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளதாகவும், அனைத்து பள்ளிகளும், நாளை பிற்பகல் 2 மணி முதல் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.