தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் காரணமாக ஏகப்பட்ட சாலை விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் சாலை விதிகள் சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை. அதனால் அந்த மாவட்டங்களில் விபத்து எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதன் படி 27.01.2023 ஆம் தேதி முதல் கோவை மாநகரில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்படும். அது தவிர அன்றைய தினம் முழுவதும் அந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்தும், அதனை பின்பற்றி எப்படி பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்தும் வகுப்புகள் எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் போக்குவரத்து பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.