நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களின் முன்னோடி திட்டமாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவு திட்டமாகவும் கருதப்படும் அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
3 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,916 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
2019ல் ரூ.1,652 கோடி ஒதுக்கீடு செய்து அப்போதைய முதல்வர் ஈபிஎஸ் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.