சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வேந்தர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 821 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக 1,031 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
ஹோமி பாபா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் அணில் கக்கோட்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.