20230107 120844

போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக் எரிக்க தடை: சென்னை மாநகராட்சி

போகிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி அனைத்து வார்டுகளிலும் உள்ள மக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக், டயர் உள்ளிட்டவவற்றை எரிப்பதை தவிர்த்து, அவற்றை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் நாளை (ஜனவரி 8) முதல் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.