தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் ஏகப்பட்ட திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் மூலமாக ஏகப்பட்ட இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.
இந்நிலையில் சென்னை ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பின் படி படித்துவிட்டு வேலைவாய்ப்பிற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலை இல்லாமல் இருக்கும், இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பொதுப்பிரிவினர் 40 வயதிற்கு உள்ளேயும், sc/ st பிரிவினர் 45 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்போருக்கு ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.