குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 26) சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மற்றும் சூலூர்பேட்டை இடையேயும், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.