தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி விழுப்புரம், கடலூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.