தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று (ஜன 23) முதல் மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. மேலும் இன்றும் பல இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25.01.2023 மற்றும் 26.01.2023 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 27.1.2023 மற்றும் 28.1.2023 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 26.01.2023 தேதியில் தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அன்றைய தினமும் 27.1.2023 மற்றும் 28.1.2023 ஆகிய தேதிகளில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.