தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்களில் இன்று முதல் ஜன. 8ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அத்துடன் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிள்ளது.
அதன் பிறகு ஜன. 9 மற்றும் 10ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30 – 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 – 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவும். அதனை தொடர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் வட கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.