தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து, பல மாவட்டங்களில் வெயில் தாக்கம் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிவிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
இதனை அடுத்து இதில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 19-ம் வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அதன் தொடர்ச்சியாக, வருகிற 20-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், குறைந்தபட்சமாக 24-25 டிகிரி முதல் அதிகபட்சமாக 33-34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.