அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதாகவும், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 18ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வரும் 19ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.