தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று முதல் ஜூலை 16 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் ஜூலை 16 வரை கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.