தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், தேர்வறையில் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. மீறினால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.