மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. போட்டிகளில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கான மருத்துவ தகுதி சான்று வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், ஐல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாட்டின் உரிமையாளர்கள் இணையதளம் மூலம் தங்களது பெயர்களை இன்று முதல் வரும் 12 தேதி மாலை 5.00 மணி வரை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1