பொங்கல் பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சந்தையில் ஆடு மற்றும் மாடு, கோழி உள்ளிட்டவை 8 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக உள்ள போச்சம்பள்ளி வார சந்தையில் விற்பனைக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
10 கிலோ எடை கொண்ட ஆடு, 7 ஆயிரம் ரூபாய் வரையும், 15 கிலோ எடை கொண்ட ஆடு, 12 ஆயிரம் ரூபாய் வரையும், ஆட்டுக்கிடாய் அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
ஆடுகளை வாங்குவதற்காக, தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர்.