தமிழகத்தில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் தற்போது தங்க நகை கடனில் தற்போது ஒரு கிராமுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகையை அதிரடியாக கூட்டுறவுத்துறை உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் நகைக்கடனுக்கு வழங்கப்படும் தொகையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் கிராமுக்கு அதிகபட்சமாக ரூ.3500 வரை கடன் வழங்கி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கூட்டுறவு பகுதிகளில் நிலவும் சூழலுக்கு தகுந்தவாறு இந்த கடன் தொகையை குறைவாகவும் மற்றும் அதிகமாகவும் வழங்கலாம்.
அதன்படி தற்போது 1 கிராம் தங்கத்திற்கு குறைந்தபட்சமாக ரூ.3200 முதல் ரூ.3700 வரை வழங்க அனுமதி அளித்துள்ளன. இந்த நிலையில் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு கடன் சங்கங்கள் தற்போது நகைக்கடனில் ஒரு கிராமுக்கு வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகையை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், கடந்த டிசம்பர் 13ம் தேதி முதல் 1 கிராம் தங்கத்திற்கு அதிகபட்ச கடன் தொகையாக ரூ.3800 வரை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 கிராமின் அதன் மதிப்பில் 75%க்கு மேல் கடன் தொகை வழங்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதே போல மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளது. அதாவது, தற்போது 1 வருடம் மற்றும் அதற்கு மேல் செலுத்தும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.25 முதல் 7.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.