ஜனவரி 1ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் செயலி மூலம் வருகைப்பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர்கள், ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வருகையையும் செயலி மூலமாக பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. போலி வருகைப்பதிவை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.