தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டது.
இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன்படி, முனைவர் க.நெடுஞ்செழியன், முனைவர் அவ்வை நடராசன், வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஓவியர் மனோகர் தேவதாஸ், மருத்துவர் மஸ்தான், கால்பந்து வீரர் பீலே, காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஒருநாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
