மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளில் பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரசு பள்ளிகளில் கூட ஸ்மார்ட் கிளாஸ், தரமான வகுப்பறைகள் போன்றவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதை தொடர்ந்து தற்போது இலவசமாக கல்வி பயில நினைக்கும் ஏழை, எளிய மாணவர்கள், தனியார் பள்ளிகளில் இன்று விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 25% இட ஒதுக்கீடு தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வரவேற்கப்படுவதாக தனியார் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.