images 73

தமிழகத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை – இன்று முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வுகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த போதை பொருளை பயன்படுத்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உணவு குழாய் பிரச்சனை, மூளை நரம்புகளில் பிரச்சனை, மனக்குழப்பம் போன்ற தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர்.

நாளடைவில் இவர்கள் மன நோயாளியாகவும் மாறுகின்றனர். இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் போதை பொருட்களின் புழக்கத்தை தடுப்பது குறித்து தமிழக முதல்வர் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் காவல்துறை மற்றும் உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்றன.

கூட்டத்தில் போதை பொருள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்க முதலில் போதை பொருளை பயன்படுத்தினால் ஏற்படும் புற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.