திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் நான்கு ஏடிஎம் மையங்களில் வட மாநில கொள்ளையர்கள் ரூபாய் 73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 6 பேரை ஹரியானா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 5 லட்சம் பணம், இரண்டு கார்கள் மற்றும் ஒரு கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அரியானா மாநிலத்தைச் சேர்ந்த வாகித் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் கார் மூலம் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.